அஞ்சாக் கல்லூரி என்றும் வாழ்கவே
அறிவுச் செல்வம் வளரவே,எங்கள்
நெஞ்சம் திருத்திடும் கோவிலிதே தூய
நேயம் பெருக்கிடும் வாயிலிதே!
திறந்த நூல் அறிவை அளித்திடுமே ஒளிச்
சுடர் தான் மடமை ஒழித்திடுமே மலர்
கலைமகள் கருணை காட்டிடுமே -முக்
குறிக்கோள் எம்சின்னம் நாட்டிடுமே
நீலம் வெண்மை நம் வண்ணங்களே,
நேர்மை ஒழுக்கம் நம் எண்ணங்களே
கடவுள் நாடு இரு கண்களாகும்
கடமை கல்வி அரும் பண்களாகும்
அய்யநாடார் அறம் போற்றிடுவோம்
அன்னை ஜானகி அருள்தனை வாழ்த்திடுவோம்
மெய்பொருள் காண்பதே அறிவு என்ற
மேன்மை வழிஇணை ஏற்றிடுவோம்
Lyrics By : | Munaivar A.Kesavamoorthy M.A.,Ph.D. |
Video Song By : | Department of Computer Applications |
You Tube Link : | https://www.youtube.com/watch?v=THABgL6jYmI&feature=youtu.be |